ADVERTISEMENT

கமல் கட்டபொம்மன் போல மீசையை முறுக்கினால் அரசியலில் விரைவில் தூக்கு; ராஜேந்திரபாலாஜியின் சர்ச்சை பேச்சு!!

04:24 PM Nov 11, 2018 | kalaimohan

ADVERTISEMENT

வீரபாண்டிய கட்டபொம்மன் போல் கமல் மீசையை முறுக்கினால் அரசியலில் தூக்கிலிடப்படுவார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அதிமுக பிரமுகரின் இல்ல விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வீரபாண்டிய கட்டபொம்மன் போல் கமலஹாசன் மீசையை முறுக்கி கொண்டு இருந்தால் அரசியலில் விரைவில் தூக்கிலிடப்படுவார். கமலஹாசன் கலாச்சாரம் விரைவில் முடிவுக்கு வரும் என கூறினார். இந்த கருத்து கமல் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT