Published on 20/12/2021 | Edited on 20/12/2021

கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது புகார் எழுந்த நிலையில், இது தொடர்பான ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதேபோல் ராஜேந்திரபாலாஜியின் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டிவரும் நிலையில், அவர் பெங்களூருவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சென்னை, மதுரையில் தேடுதல் வேட்டை நடத்திவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கைதுசெய்ய தமிழ்நாடு காவல்துறை பெங்களூரு விரைந்துள்ளது.