ADVERTISEMENT

''ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க''- டென்ஷன் ஆன ஜெயக்குமார் 

04:37 PM Aug 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான, ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (01/08/2022) காலை 11.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதன் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கோவை செல்வராஜ் கலந்துகொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், ''அதிமுகவின் சார்பில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் நாங்கள் இரண்டு பேரும்தான் கலந்துகொண்டோம். எனவே வேறு யாரோ கலந்துகொண்டது பற்றி எங்களிடம் கேட்காதீர்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் எனத் தேர்தல் ஆணையத்திடம் கேளுங்கள் என டென்ஷன் ஆனார். அப்பொழுது, கோவை செல்வராஜ் அதிமுக இடத்தில் உக்கார்த்திருந்தாரே எனத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, 'ஏங்க அதிமுக என்றால் நாங்கதாங்க' என்றார்.

விடாத செய்தியாளர்கள் 'இன்றைக்குத் தேர்தல் ஆணையத்தில் வந்ததுபோல் நாளை சட்டமன்றத்தில் நாங்கள்தான் அதிமுக என்று அவர்கள் வந்து உட்கார்ந்தால்? எனக் கேள்வி எழுப்ப, ஏங்க யாராவது ஏதாவது சொல்லிட்டுப்போறாங்க அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT