style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை மெரினாவில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்ததே வைரமுத்துவுக்குநெருக்கமாக இருக்கும் திமுக தான். எனவே ஒரே நாளில்தமிழகத்தில்மதுவிலக்கை கொண்டு வர முடியாது. கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்புகள்ஏற்படும் என்பதால் படிப்படியாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர். அதிமுக ஆட்சியில் எங்களைவிட திமுக எம்எல்ஏக்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில்திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் எனக்கூறினார்.