Published on 12/02/2021 | Edited on 12/02/2021

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. அதிமுக, திமுக சார்பிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மீனவர்களின் பாதுகாப்புக்காக வாக்கிடாக்கி வாங்கப்பட்டதில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் 300 கோடி ஊழல் செய்திருப்பதாக தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதையடுத்து ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்ற அமைச்சர் ஜெயக்குமார், அதற்கான அரசாணையையும் பெற்றுள்ளார். எனவே அவர் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.