ADVERTISEMENT

''பா.ஜ.க.விற்கு ரஜினி ஆதரவு தந்தால் அதனை வரவேற்போம்'' - பா.ஜ.க. எல்.முருகன் பேட்டி...

07:23 PM Jan 10, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. சார்பில், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் 'நம்ம ஊர் பொங்கல்' நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக, தமிழக பா.ஜ.க. தலைவர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது,

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராத பட்சத்தில் பா.ஜ.க. அவருடைய ஆதரவு கேட்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,

''தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துகொண்டிருக்கிறது. ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம்''

அ.தி.மு.க.வுடனான கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு கேட்க நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் 'போகாத ஊருக்கு வழி தேடுவது போல' என வைகைச்செல்வன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு,

''தேர்தல் முடியட்டும், அதன் பிறகு அதனை குறித்து பேசிக்கொள்ளலாம்''

அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிப்பதாக, தொடர்ந்து தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு,

''அஞ்சல்துறைத் தேர்வில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போல, விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்''

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல், மும்பையில் நடைபெறுவதாக எழும் குற்றசாட்டு குறித்த கேள்விக்கு,

''இந்தியாவிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் கல்பாக்கம் ஒரு பகுதி எனவும், அதன் தலைமையிடம் மும்பையில் இருப்பதனால், தேர்வு மும்பையில் நடப்பது இயல்பான விஷயம். வேண்டுமானால் தமிழகத்தில் வைக்கலாம் என கோரிக்கையாக வைக்கலாமே தவிர அனைத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது''

அமித்ஷா 13- ஆம் தேதி மீண்டும் சென்னை வரும்பட்சத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிக்க வாய்ப்புள்ளதா? மற்றும் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா எனக் குறித்த கேள்விக்கு,

''அமித்ஷா வருவது குறித்து அதிகாரபூர்வமான தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம்''

சிறுபான்மையினருக்கு எதிரி பா.ஜ.க.தான், என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு,

''அனைத்து கிறிஸ்துவ, முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் பாஜகவில் ஆர்வமுடன் சேர்கின்றனர். நாட்டை சரியான பாதையில் பா.ஜ.க. கொண்டு செல்கிறது''

அ.தி.மு.க. கூட்டணியில், 40- க்கும் மேற்பட்ட தொகுதிக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகக் குறித்த கேள்விக்கு,

''உங்களின் யூகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது. தொகுதிப் பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்''

தைப்பூசத்திற்கான அரசு விடுமுறை நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையாகவே நிறைவேற்றப்பட்டது என சீமான் கூறியது குறித்த கேள்விக்கு,

''பா.ஜ.க. வேலயாத்திரை நடத்தி, அதன் மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது'' என்று பேட்டியை முடித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT