Judge praises Annamalai!

பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Advertisment

பாஸ்போர்ட் மோசடியில் நோடல் வரை உள்ள அலுவலர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாகவும், மோசடி நிகழ்ந்த காலத்தில் மதுரையில் காவல் ஆணையராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த மோசடி வழக்கை உரிய காலத்தில் விசாரித்திருந்தால், சர்ச்சை வந்திருக்காது என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்சனையை முன்னெடுத்ததற்காக பாராட்டிய நீதிபதி, பாஜக தமிழக தலைவர்அண்ணாமலைகேள்வி எழுப்பாமல் இருந்திருந்தால், இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.