ADVERTISEMENT

ஐஜி பொன்மணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது- அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

03:51 PM Nov 26, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திருடி ஒழித்து வைக்கப்பட்டுள்ள கோயில் சிலைகளை கண்டுபிடித்து உண்மையை வெளிக்கொண்டுவரும் நேர்மையான அதிகாரியான சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கபாலீஸ்வரர் கோவில் மயில்சிலை திருடப்படட்ட வழக்கில் தொழிலதிபர் வேணுஸ்ரீனிவாசன், ஸ்தபதி முத்தையா, அறநிலைத்துறை ஆணையர் திருமால் உட்பட நன்கு பேர் முன்ஜாமீன் கோரியுள்ள வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது.

கபாலீஸ்வரர் கோயில் சிலைதிருட்டு வழக்கில் ஒரு தனிநபர் மீதான அணைத்து ஆதாரங்களும் திரட்டி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் இந்தவழக்கில் நேரில் ஆஜரான சிலைகடந்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாக நீதிமன்றத்தில் புகாரளித்தார். மேலும் சிபிசிஐடி போலீசார் தன்னிடம் விசாரித்ததாகவும் கூறினார். இதனைஅடுத்து ஐஜி பொன்மாணிக்கவேல் மீது நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல், அவருக்கு எதிராக ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT