ADVERTISEMENT

யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர்; மனைவிக்கு நேர்ந்த சோகம்!

03:29 PM Aug 23, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருக்கும், போச்சம்பள்ளியை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த லோக நாயகிக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. மாதேஷ் - லோகநாயகி இருவரும் வேளாண்மை படிப்பு படித்துள்ளனர். மேலும் இருவரும் இயற்கையின் மீதும், இயற்கை மருத்துவம் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகநாயகி கர்ப்பமடைந்துள்ளார். இதனிடையே கர்ப்பமானால் தனக்கு இயற்கை முறையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்று லோகநாயகி தனது கணவரிடம் கூறியதாகச் செல்லப்படுகிறது. அதனால் பிரசவ காலத்தில் பெண்களுக்குப் போடும் எந்த விதமான தடுப்பூசியும் லோகநாயகி போடவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், லோகநாயகிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கணவன் மனைவி பேசிக்கொண்டது போல், இயற்கை முறைப்படி எவ்வாறு பிரசவம் பார்ப்பது என்று யூட்டியூப் பார்த்து லோகநாயகிக்கு, கணவர் மாதேஷ் பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் லோகநாயகிக்கு ரத்தப்போக்கு நிற்காமல் மயக்கமடைந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு லோகநாயகியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT