Three elephants passed away after stepping  electric fence set up by farmer

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஅள்ளி அருகே விவசாயியான முருகன் தனது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் அந்த வழியாக சுற்றிக்கொண்டிருந்த 3 காட்டுயானைகள் தவறுதலாக மின்வேலியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர் இது குறித்து விசாரணை செய்ததில் விவசாயி முருகேசன் சட்ட விரோதமாக அருகே உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் எடுத்து மின்வேலி அமைத்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்ததற்காக முருகேசனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment