ADVERTISEMENT

நூறுநாள் திட்ட நிதியின் ஒரு பகுதியை நதிகள் இணைப்புக்கு பயன்படுத்தலாம் - விசுவநாதன் பேச்சு

02:54 PM May 06, 2019 | raja@nakkheeran.in

நவீன நீர்வழிச்சாலை மற்றும் அனைத்து மக்கள் நல அறக்கட்டளை சார்பில் சென்னையில் கங்கா - குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் புத்தக வெளியீடு விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டபின் பேசிய விஐடி வேந்தர் விசுவநாதன் பேசும்போது, “அனைத்து நாட்டிற்கும் தண்ணீர் முக்கியம். ஆனால் நம் நாட்டில் தண்ணீர் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா 18 சதவீத மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஆனால், தூய்மையான நீர் 4 சதவீதம் மட்டும் தான் உள்ளது. இதுவே நிலத்தை எடுத்துக்கொண்டால் வெறும் 2.4 சதவ்ஈதம் தான் நமக்கு உண்டு.

ADVERTISEMENT


நிலம், நீர் இவை இரண்டையும் நாம் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் நமக்கு பிரச்சனை தான். பல வருடங்களாக நாம் நதி நீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். 1967 பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது, நான் அப்போதைய நீர்வழி துறை அமைச்சர் கே.எல்.ராவுடன் தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அமைச்சர், கங்கா நதிநீர் இணைப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் கோதாவரி - காவேரி நதிநீர் இணைப்பு சுலபம் தான், நதிநீர் இணைந்தால் தென்னிந்தியாவிற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்றார். அந்த மாநிலத்தில் பாயும் நதி நீரை அம்மாநில தேவைக்கு போக மீதி இருக்கும் நீரை நாம் பிற மாநில நதியோடு இணைத்துவிடலாம். இவ்வாறு செய்வதால் எந்த வித பிர்ச்சனையும் வராது. யாரும் இதுக்கு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் என்றார். ஆனால், அப்போதைக்கு அதை செயல்படுத்த முடியவில்லை என்றார்.

ADVERTISEMENT


மத்தியரசு ஆண்டு தோறும் ரூ. 28 இலட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறது, இதில் ரூ. 1 இலட்சம் கோடியை நதி நீர் இணைப்புக்கு ஒதுக்கினால் 10 ஆண்டு காலத்திற்குள் நதி நீர் இணைப்பு திட்டத்தை நாம் செயல்படுத்திவிடலாம். நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்துக்கு அரசு ரூ. 5 இலட்சம் கோடி ஒதுக்கிறது. இதில் ஒரு பகுதியை நாம் நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் விவாசயிகள் தற்கொலைகளை தடுக்கலாம். குடிநீர் பிரச்சனை காரணமாக மக்கள் சாலைக்கு வந்து போராடி கொண்டிருக்கிறார்கள் மறுபுறம் மழை பெய்யும்போது நீர் நிலைகளில் நீரை தேக்காமல் விட்டுவிடுகிறோம். கோதாவரியில் மட்டும் ஆண்டுக்கு 2000 - 3000 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் கலக்கிறது சராசரியாக 1600 டி.எம்.சி என எடுத்துக் கொள்ளலாம். கிருஷ்ணா நதி நீருக்கு அதிகளவு பாய்ச்சல் நிலம் உள்ளது. அதே போல் விஜயவாடாவில் பிரகாசம் நீர் தேக்கம் உள்ளது. அதை சரிவர பராமரிக்காமல் தூர் வாராததால் வெள்ள பெருக்கு காலத்தில் நீர், கடலில் அதிகளவு கலந்துவிடுகிறது. மேற்கு பகுதியில் (கேரளா - கர்நாடகா) பாயும் ஆறுகளின் நீர் பெரும்பாலும் கடலில் தான் கலக்கிறது.


சமீபத்தில் தமிழகத்தில் பெய்த மழையில் சுமார் 250 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் கலந்திருக்கிறது. தாமிரபரணி முதல் பாலாறு வரை நாம் நதி நீரை இணைக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 40 ஆயிரம் ஏரிகள் உள்ளது. இவை அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு நாம் பாதுகாப்பதால் ஏரிகளில் மட்டும் சுமார் 250 டி.எம்.சி அளவு தண்ணீரை சேமிக்க முடியும். அதை நாம் செய்யாமல் தண்ணீருக்காக நீதி மன்றத்தில் போராடி கொண்டிருக்கிறோம். இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.


மேட்டூர் அணையை சரியாக தூர்வாரினால் நீர் சேமிக்கும் அளவை நாம் உயர்த்தலாம். தென்னை, கரும்புக்கு சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சினால் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இஸ்ரேல் நாடு சொட்டு நீர் பாசன முறையில் உலகளவில் முன்னோடியாக திகழ்கின்றது. சீனாவில் தண்ணீர் அளவு குறைவு ஆனால் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு விரைவில் மத்தியில் அமையவிருக்கும் அரசு நதி நீர் இணைப்புக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT