student suicide

உலக அளவில் பெயர் பெற்றது வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம். உலகின் பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல பகுதி மாணவர்கள் விஐடி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.

Advertisment

இக்கல்லூரியில் பொறியியல் பிரிவில் படிக்கும் மாணவர் ஜக்கால் பலனி ஓம் பிரகாஷ். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்தவர். இவர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இன்று மே 1ந்தேதி அவரது அறையில் தீடீரென​ அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பற்றி சக மாணவர்கள் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்த அவர்கள் காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜக்கால் பலனி ஒம் பிரகாஷ் இறுதி ஆண்டு தேர்வில் ஏழு பாடங்களில் தேர்ச்சி அடையாதலால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கொலை வரை நடந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Advertisment