நவம்பர் 18 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைபெற்ற அனைத்து மண்டலங்களுக்கான மகளிர் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சி வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

strike to be held in VIT campus by dmk

Advertisment

அதற்கான அழைப்பிதளில் அந்த பகுதி காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதால் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்ற எதிர்க் கட்சித் துணை தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ பெயரும், அந்த தொகுதியின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜெகத்ரட்சகன் எம்.பி பெயரையும், வேலூர் மாவட்டத்தை சார்ந்த திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரை அதற்கான விழா அழைப்பிதழில் திட்டமிட்டு புறக்கணித்து விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Advertisment

இதில் அதிமுகவில் இருக்கும் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்களை மட்டுமே அழைபிதழில் அச்சிட்டு, விழா நடத்துவது மட்டுமல்ல இப்படிப்பட்ட அரசு விழவை ஒரு தனியார் கல்லூரியில் நடத்துவதே தவறான செயல். ஆகவே அதிமுக அரசின் இத்தகைய செயலை வேலூர் மாவட்ட திமுக வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், திமுக தலைமை கழக அனுமதியுடன் அன்றைய தினம் 18-11-2019 அன்று காலை வி.ஐ.டி கல்லூரி வளாக நுழைவு வாயில் முன்பு கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.