ADVERTISEMENT

10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

02:08 PM Jan 16, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துவருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிபாடுதளங்களுக்கு அனுமதி இல்லை, உணவகங்கள் & திரையரங்குகளில் 50% இருக்கை, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் உள்ளிட்டவற்றை அறிவித்து கடைபிடிக்கப்பட்டுவருகிறடுது.

அதேபோல், கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஜனவரி 31ஆம் தேதி வரை தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகளும் நடைபெறுமென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்த வகுப்புகள் வரும் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT