Holiday announcement for four district schools

தொடர் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இன்று நடைபெற இருப்பதால் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment