ADVERTISEMENT

16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

11:35 PM Nov 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய இன்று வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திருச்சி, திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT