ADVERTISEMENT

'வருகிற தேர்தலில் நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல்தான் வெற்றிபெறும்'-அர்ஜூன் சம்பத் பேட்டி!

07:31 PM Oct 01, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றியடைய சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடக்க இருப்பதாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் இன்று மறைந்த ராமகோபாலன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், "ஆன்மிகம், தேசியத்திற்காக பாடுபட்ட ராமகோபாலனுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு மணி மண்டபம் கட்ட வேண்டும். மேலும் கறுப்பர் கூட்டம் தற்போது குருஜி என்ற பெயரில் செயல்பட்டு கந்தசஷ்டி கவசத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது.

இது குறித்து தமிழக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ஒரு நாடு ஒரு ரேசன்' திட்டம் சிறப்பான திட்டம். இந்த திட்டம் குறித்து தி.மு.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதனை முறியடித்து திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக அரசியல் அணியை உருவாக்கி வெற்றிபெற வைக்க இந்து மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றியடைய ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கந்தசஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆன்மீக அரசியல் என்பது வளர்ச்சி, ஊழலற்ற ஆட்சியாகும். தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.கவில் உட்கட்சிப் பூசல் எதுவும் கிடையாது. அரசியல் ரீதியாக ஆதாயம் அடைய தி.மு.க.தான் தூண்டிவிட்டு வருகிறது." என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT