ADVERTISEMENT

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ! வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிட இடைக்காலத் தடை!

06:29 PM Nov 14, 2019 | santhoshb@nakk…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் (Arbitration Center) உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "ஹீரோ" திரைப்படம், வரும் டிசம்பர் 20- ஆம் வெளியிட 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் 24 ஏஎம் பிலிம்சின் பங்குதாரர்களான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகியோர் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடமிருந்து கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 10 கோடி ரூபாய் கடனாகப் பெற்றனர். ஆண்டுக்கு 24 சதவீதம் வட்டியுடன் 10 மாதங்களில் கடனைத் திருப்பி செலுத்துவதாகக் கூறிய நிலையில், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை.

ADVERTISEMENT



இந்நிலையில், 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஹீரோ படத்தை, கே.ஜெ.ஆர். பிலிம் நிறுவனத்தின் மூலமாக படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே ஹீரோ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒப்பந்தப்படி கடன் தொகை 10 கோடி ரூபாயை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் டி எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவன தரப்பில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நடுவர் மையம், ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களின் பெயரில் வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 2- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT