ADVERTISEMENT

அதிக கனமழை எச்சரிக்கை; இரு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

07:29 PM Nov 10, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

10, 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி வர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் நாளை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டதை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT