ADVERTISEMENT

தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அறிவிப்பு... வந்தது சேர்ந்தது மத்திய ஆய்வுக்குழு!

01:30 PM Nov 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. பல இடங்களில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி கன மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கன மழை பொழியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்த குழுவில் விவசாயம், நிதி, நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் இரண்டாகப் பிரிந்து தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கின்றனர். நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி மாவட்டத்திலும், 23ஆம் தேதி கடலூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டையிலும் ஆய்வு நடைபெறும். நாளையும், நாளை மறுநாளும் ஆய்வு நடத்தும் குழுவினர் நவம்பர் 24ல் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT