ADVERTISEMENT

'இதயத்தில் பேரிடியாக இறங்கியது' - பாஜக அண்ணாமலை இரங்கல்

07:51 AM Dec 30, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் 'தாயாரை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், 'பிரதமரின் தாயார் மறைவு மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு; அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், 'பிரதமர் மோடியின் தாயார் கடவுளின் பாத கமலத்தைச் சென்றடைந்தார்' எனத் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் 'பாரதப் பிரதமரின் அன்னையின் மறைவு செய்தி இதயத்தில் பேரிடியாக இறங்கியது' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT