ADVERTISEMENT

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

01:20 PM Aug 01, 2018 | paramasivam



அன்றாடம் கேரளாவிற்குத் தேவையான காய்கறி தொட்டு உணவு, உடை மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியமான அவசியமான கேரளவாசிகளின் உபயோகத்திற்கான பொருட்கள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலமாக தமிழகத்தின் நெல்லைப் பகுதியிலிருந்து மாவட்ட எல்லையான புளியரைப் பார்டர் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அது போன்ற வாகனங்கள் எல்லையில் உள்ள தமிழக மற்றும் கேரள அரசுகளின் மோட்டார் வாகன, போலீஸ், வனத்துறை மற்றும் சுங்கம் போன்ற நான்கு வகையான சோதனைச் சாவடிகளின் தணிக்கைக்குப் பின்பே பார்டர்ரைக் கடந்து கேரளா செல்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது போன்ற வாகனங்களில் சில வேளைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதுண்டு, அவைகளில் பலது பிடிபட்டலும் சிலதுகள் கவனிப்பின் அடிப்படையில் செல்வதுமுண்டு.

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சில வேளைகளில் போதைப் பொருட்களும் கடத்தப்படுகின்றன. அண்மைக் காலமாகப் பிடிபட்டதில் கஞ்சா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜபாளையத்திலிருந்து கஞ்சாவை கேரளாவுக்கு டூவீலரில் கடத்திச் சென்ற திருவனந்தபுரம் கல்லூரி மாணவர்கள் மூவர் செங்கோட்டை பார்டரில் இன்ஸ்பெக்டர் பிரதாபனால் பிடிபட்டுமிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்திலிருந்து தொடர்ந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கேரளாவின் கொல்லம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரிகுமாருக்குத் தகவல்வர அவரது தனிப்படை பார்டரின் ஆரியங்காவு பகுதியில் சோதனை நடத்தினர். அதிகாலை நெல்லையிலிருந்து கேரளாவுக்குள் நுழைந்த பிராய்லர் கோழி மினிலாரியை சோதனையிட்டதில் அதில் மறைத்துவைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா மூடைகள் பிடி பட்டுள்ளன. அவைகளைக் கைப் பற்றிய போலீசார் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் ரவி, மற்றும் உரிமையாளர் மகேஷ் இருவரையும் கைது செய்தார்.

பிடிபட்ட குட்கா சுமார் 800 கிலோ எடை கொண்ட 30 லட்சம் மதிப்புடையது. இவைகளைக் கடத்திக் கொண்டு போய் கேரளாவிலுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் முந்திரி, தேயிலை தோட்டம், கட்டுமானப் பணிகளுக்கென்று கேரளா வந்து பணிபுரியும் வங்காளிகள், பீகார் மாநில தொழிலாளர்கள் போன்றவர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் நார்காட்டிக் பிரிவின் இன்ஸ்பெக்டரான ஹரிகுமார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT