/nakkheeran/media/post_attachments/4cae4c35-a63.png)
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஏப்.26ஆம் தேதி உத்தரவிட்டது. தமிழகத்தில் தடையை மீறி, சட்டவிரோதமாக குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்று அனுமதித்தது தொடர்பாக, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ்., குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். மேலும் இது சமூகத்திற்கு எதிரான குற்றம். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள் தொடர்புடைய நிலையில் சிபிஐக்கு உத்தரவிடுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக சுகாதாரத்துறை அலுவலர் சிவக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குட்கா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)