Gutka in the bus from Bihar... police investigation!

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் சோதனை சாவடியில் தனியார் பேருந்தில் கடத்திவரப்பட்ட 50 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பேருந்தை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தி, பீகாரில் இருந்து காரைக்குடிக்கு வேலையாட்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குட்காக கடத்திய மிதுன் ரிஷிகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் குட்கா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பீகாரிலிருந்து தமிழகத்திற்கு வேலையாட்களை ஏற்றிவந்த பேருந்தில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment