ADVERTISEMENT

காவலர் என்றால் தகாத இடத்தில் தொடுவாயா!! -வளர்மதி பகிரங்க குற்றசாட்டு

05:16 PM Aug 25, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிவாரண தொகை திரட்ட ஒன்று சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் மாணவி வளர்மதியும் பங்குகொண்டார். அந்த நிதி வசூல் செய்யும் நிகழ்ச்சியை ஸ்டாலின் என்ற உளவுத்துறை காவலர் வீடியோ எடுத்துள்ளார். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து அவர் வீடியோ எடுத்ததால் அவரை வசூல் செய்யும் அமைப்பினர்கள் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில். தாக்கப்பட்ட காவலர் தப்பித்து ஓடி பெரியமேடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக பெரியமேடு போலீசார் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கதத்தின் செயலாளர் மாணவி வளர்மதி மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன்,காளிமுத்து, சாஜன்,மணிகண்டன் என 5 பேரை கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து மாணவி வளர்மதி சொல்லியுள்ள குற்றச்சாட்டில் அவர் போலீஸ் அதிகாரி உடையிலேயே இல்லை எனவே அவர் போலீஸ் அதிகாரி என்றே தெரியாது . என்னிடம் தவறான இடத்தில கையை வைத்தார் அதற்காக அவரை தாக்க முற்படும்பொழுது காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் அப்போதுதான் அவர் காவலர் என்றே எங்களுக்கு தெரியும் என கூறினார். அதுமட்டுமின்றி காவலராக இருந்தால் ஒரு பெண்ணை தகாத இடத்தில் தொடுவாயா என நாங்கள் கேள்வியெழுப்பினோம் ஆனால் போலீஸ் எங்கள் மீது பாய்ந்து வழக்கு பதிவுசெய்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT