ADVERTISEMENT

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள்- டி.என்.பி.எஸ்.சி. தலைவரின் விரிவான விளக்கம்!

10:51 PM Feb 18, 2022 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி அன்று டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்படும். இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மார்ச் 23- ஆம் தேதி ஆகும். அதைத் தொடர்ந்து, மே 21- ஆம் தேதி அன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும்.

மொத்தம் உள்ள 200 கேள்விகளில் 100 கேள்விகள் தமிழ் பாடத்தில் இருந்து இருக்கும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் இனி காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடத்தப்படும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுக்கான நேரத்தில் மாற்றமில்லை.

குரூப் 2 முதல்நிலை தேர்வில் தமிழ் கட்டாயமில்லை; பொது ஆங்கிலம் (அல்லது) பொது தமிழைத் தேர்வு செய்யலாம். குரூப் 2 முதன்மைத் தேர்வில் தமிழ் தாள் கட்டாயம்; கட்டாயம் தமிழ் தாளில் 40 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. தமிழில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் மதிப்பீடு செய்யப்படும். வினாத்தாள் ரகசியமாக தயாரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 60 நபர்கள் மூலம் 6 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. நேர்முகத் தேர்வு மூலம் 116 பதவியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலம் 5,413 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT