ADVERTISEMENT

தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் -மணல் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!

06:10 PM Aug 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதித்ததால் மணல் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளரை விசாரிக்க நேரிடும் என மணல் கடத்தல் வழக்கு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது..

மணல் கடத்தல் விவகாரத்தில் இதே நிலை தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை காணொளி மூலம் விசாரிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், அரசாணையின்படி மணல் குவாரிகள் அரசால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உபரி மண், சவுடு மண் எடுக்க என உரிமை வழங்கி சட்டவிரோத மணல் கடத்தலை அரசு ஊக்குவிக்கிறது. அரசின் பதில் மனுவில் உள்ள திட்டங்கள், அரசாணைகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 14 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT