ADVERTISEMENT

தகவல் தெரிவிக்காவிட்டால் 2 ஆண்டு சிறை! தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை!

12:15 PM Dec 19, 2018 | nagendran




ADVERTISEMENT

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை. தங்களிடம் சிகிச்சைப் பெற வரும் காசநோய் நோயாளிகள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT


"நமது நாட்டில் ஆண்டுக்கு 1400 காச நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். நாட்டில் 1 லட்சத்து 217 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் 2 பேர் வீதம் இறக்கிறார்கள். குறிப்பாக இந்த நோய் காற்றினால் பரவுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, நோயின் அறிகுறி தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு இருமல் களி காய்ச்சல் இருக்கும் நோய் பாதிக்கப்பட்டவர் இருமினால் 30 செ.மீ தூரத்திற்கு எதிரில் உள்ளவருக்கு பாதிக்கும்., மனஅழுத்தம் உள்ளவர்கள், சரியாக உணவருந்தாதவர்கள், நேர் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்க்கு வாய்ப்பு உள்ளது. நோய் உள்ளவர்கள் இருமும் போது வாயில் துணி வைத்துகொள்ளவேண்டும்.


தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் காசநோயாளி குறித்து விபரம் தெரிவிக்க 2012ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 2015ல் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 2016ல் அரசுக்கு தெரியபடுத்தாதவர்கள் மீது 269,270 ஆகிய பிரிவுகளின் கீழ் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்டும் என அரசு இதழில் தெரியபடுத்தப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு ரூ.500 சன்மானமும் வழங்கப்படும். குணமடைந்துவிட்டால் நோயாளிக்கும் ரூ.500 வழங்கப்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சிவகங்கையில் நடத்தப்பட்ட முகாமில் நகரில் 2 நபருக்கு காசநோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது, அடுத்தவாரம் காரைக்குடியில் காசநோய்கான மருத்துவமுகாம் நடத்தப்படும்." என்கிறார் சிவகங்கை மாவட்ட காசநோய் மருத்துவ பிரிவின் இணைஇயக்குனரான ராஜசேகரன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT