blood donation

சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது. அதற்கான காரணம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் வழங்கியதே காரணம் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

கடந்த மாதம் சிவகாசி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருந்தபோது ஒரு நாளைக்கு 1,300 பேர் வரை வந்து காய்ச்சலுக்கும் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

Advertisment

கடந்த 24-ந்தேதி சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோய்களுக்காக 535 பேர் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். அதை தொடர்ந்து கடந்த 26-ந்தேதி சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டது என்று தகவல் பரவியதை தொடர்ந்து அன்று 313 பேர் மட்டுமே சிகிச்சை பெற வந்துள்ளனர். நேற்று 381 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இன்றும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் சென்னை பெண்ணுக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே பல அரசு மருத்துவமனைகயில் நோயாளிகளை நல்ல முறையில் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கவனிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட தகவல் அறிந்து பொதுமக்களுக்குசிவகாசி மட்டுமல்ல சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள் முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை என்றால் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisment