ADVERTISEMENT

குறைக்கப்பட்ட கட்டணத்தில் அரசு கேபிள்! மாவட்ட கலெக்டர் உத்தரவு!

09:55 AM Sep 01, 2019 | kalaimohan

திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி பல அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கேபிள்டிவி குறித்து ஒரு அதிரடி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் மத்திய அரசின் தொடர்பு தொலைபேசி தொடர்பு அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டிவி சேனல்களை ஒளிபரப்ப வேண்டும் என்றும் பழைய முறையிலான அனலாக் முறை ஒளிபரப்புக்கு முற்றிலும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கடந்து 2017 செப்டம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களுக்கு விலையில்லா செட்டாப்பாக்ஸ் மூலம் உயர் தொழில்நுட்பத்தில் துல்லியமான முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது. மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் படி அனலாக் சிக்னலில் ஒளிபரப்புவது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்யும் ஆபரேட்டர்கள் உடனடியாக ஒளிபரப்பு நிறுத்தம் செய்து சந்தாதாரர்களுக்கு ஜெட் டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும் மீறினால் சட்டப்படி ஆபரேட்டர்களின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி செட்டாப் பாக்ஸ்களை நிறுவனத்திற்கு நிறுவனம் பரிமாற்றம் செய்வது குற்றம் அந்த வகையில் அரசு செட்டாப் பாக்ஸ்களை பரிமாற்றம் செய்வது தெரியவந்ததால் ஆப்பரேட்டர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கேபிள் டிவி நிறுவனம் 144 ,154 மாத சந்தா தொகையை 190 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சந்தா கட்டணம் குறித்து குறைப்புக்கு பின்னர் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இணைப்புக் கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் இணைப்பு வழங்க வேண்டும். இணைப்பு வழங்க மறுத்தால் 1800 42 52 911
மற்றும் 94 9800 25 72 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தனது அறிக்கையில் மாவட்ட கலெக்டர் கூறி இருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT