ADVERTISEMENT

திடீரென மயங்கி விழுந்த அரசு பேருந்து நடத்துநர்!

11:38 PM Feb 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதுக்கோட்டை- கொத்தமங்கலம் செல்லும் அரசு டவுன் பேருந்தில், பழனியப்பன் (வயது 35) என்பவர் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் மணப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த திங்கள்கிழமை மாலை, புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலம் வாடி மாநகர் கடைவீதிக்கு, பேருந்தில் நடத்துநராக வந்துள்ளார்.

ADVERTISEMENT

பேருந்து மீண்டும் புதுக்கோட்டைக்குச் செல்வதற்காக, பேருந்தை ஓட்டுநர் திருப்பும் போது, பழனியப்பன் பின்பக்கம் பார்த்துக் கொண்டு விசில் ஊதிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் சொல்லி மயங்கிக் கிடந்த நடத்துநரை மீட்டு, தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இறங்கிவந்த பேருந்து ஓட்டுநர் மயங்கிக் கிடந்த நடத்துநரை, அதே பேருந்தில் ஏற்றி கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

முன்னதாக, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி பணிமனை அதிகாரிகள், சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் பழனியப்பனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக வேலை செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் கூறினாலும், கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக நடத்துநர் பழனியப்பன் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT