ADVERTISEMENT

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் அடாவடி... பொதுமேலாளர் வரை சென்ற புகார்!

10:29 PM Jun 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் தொழுதூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கடந்த 9 ஆம் தேதி இரவு 9 மணியளவில் திருச்சி மத்தியபேருந்து நிலையத்திலிருந்து தொழுதூர் செல்வதற்காக சென்னை செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் இந்த பேருந்து தொழுதூர் செல்லாது பஸ்ஸை விட்டு இறங்குமாறு மிரட்டியுள்ளனர். அப்போது ஜெயராமன் சென்னை செல்லும் அனைத்து பேருந்துகளும் தொழுதூர் வழியாகத்தானே செல்லும் இந்த பஸ் மட்டும் ஏன் அங்கு செல்லாது என்று கூறுகிறீர்கள், இதென்ன என்ன விமானமா பறந்து செல்வதற்கு என்று எதிர்த்துக் கேட்டுள்ளார். அதற்கு ஓட்டுநர் சுந்தர்சிங், நடத்துநர் சுரேஷ் ஆகியோர் அடாவடித்தனமாக ஜெயராமனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு பஸ்சை விட்டு கட்டாயப்படுத்தி கீழே இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து ஜெயராமன் விழுப்புரம் போக்குவரத்துக்கழக பொது மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை-காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் பயணிகள் ஏறினால் தொழுதூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களுக்கு செல்பவர்களுக்கு டிக்கெட் தராமல் கீழே இறக்கி விடுவதும், நீண்ட தூரம் செல்பவர்களை மட்டுமே பஸ்ஸில் ஏற்றுவது இல்லையேல் பயணிகளை நீண்ட நேரம் காக்க வைத்து, பஸ் புறப்படும் நேரத்தில் அவர்கள் நின்று கொண்டே பயணம் செய்ய வைப்பது, இப்படி அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் தொடர்ந்து அடாவடித்தனம் அராஜக செயல்களைச் செய்து வருகிறார்கள். அரசு போக்குவரத்துக் கழகம் 50,000 கோடி நஷ்டத்தில் இயங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே அரசு பேருந்துகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளனர். இதற்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்கிறார்கள் ஜெயராமன் போன்று அடிக்கடி தங்கள் பணிகளுக்காக பல்வேறு ஊர்களுக்கும் பஸ்ஸில் பயணம் செய்வோர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT