Published on 30/08/2022 | Edited on 30/08/2022

பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் பேருந்து பயணங்களின் பொழுது பிற பயணிகளுக்கு ஏற்படும் இடையூறு நிகழ்வுகளும் வீடியோக்களாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் கை ஒடிந்த நிலையில் மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் உட்க்கார இடமில்லாமல் படியில் அமர்ந்துகொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக விசாரித்ததில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. விழுப்புரம் அரசு பேருந்து போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 'டி12' என்ற அந்த பேருந்து பயணத்தின் பொழுது இந்த மனிதநேயமற்ற சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.