Skip to main content

ஆயிரம் உயிரை வாங்கிய அபூர்வ பாலம் 

Published on 16/06/2018 | Edited on 16/06/2018

 

தஞ்சை - விக்கிரவாண்டி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பண்ரூட்டி - வடலூர் இடையே உள்ளது கண்ணு தோப்பு பாலம். இந்த பாலம் 1909-ல் கட்டப்பட்டது. தினசரி பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இப்பாலம் குறுகிய ஒருவழிப்பாதையாக உள்ளது. இரு பக்கங்களிலும் போதிய அளவு தடுப்பு சுவர் இல்லை. மிகுந்த ஆபத்தான இப்பாலத்தில் மட்டும் இதுவரை 2071 விபத்துகள் நடந்துள்ளது. இதிலே உயிரிழந்தவர்கள் மட்டும் 810 பேர்கள். கை மற்றும் கால்களை இழந்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என்கிறது புள்ளி விபரம்.

 

 


விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சை வரையான இந்த தேசிய சாலை எண் 45.11 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் திமுகவின் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது இந்த சாலையை நான்கு வழிசாலையாக்கப்படும் என்று அறிவித்தார். 11 ஆண்டுகளாக சாலைப்பணி ஆமை வேகத்தைவிட மிக மிக மெதுவாக நடக்கிறது. 

 

 



சாலை விரிவாக்கப்பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியே முடியவில்லை. இதனால் பல ஒப்பந்தக்காரர்கள் வந்து வந்து போனார்களே தவிர எந்த பணிகள் தொடங்கப்படவில்லை. இந்த சாலைப் பகுதிக்குள், தஞ்சை எம்.பி பரசுராமன், மயிலாடுதுரை எம்.பி. பாரதிமோகன், சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி, கடலூர் எம்.பி அருண் மொழிதேவன், விழுப்புரம் எம்.பி ராசேந்திரன் ஆகிய ஐந்து எம்.பிக்கள் ஆட்சி செய்கிறார்கள். யாருமே இந்த சாலை விரிவாக்கத்தையும், கண்ணுதோப்பு உயிர்பலி வாங்கும் பாலம் பற்றியும் கண்டு கொள்ளவே இல்லை. 

 

 



இந்த தஞ்சை, விக்கிரவாண்டி சாலை பணியை இப்போது தான் சில இடங்களில் குப்பையை அகற்றி வருகிறார்கள். எப்போது சாலை பணி முடியுமோ இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்கிறார்கள் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்...

சார்ந்த செய்திகள்