ADVERTISEMENT

பல் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

02:57 PM Jan 29, 2024 | prabukumar@nak…

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. அதன் பின்னர் அப்போதைய அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

அதே சமயம் பல்வீர் சிங் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் 4 வழக்குகள் பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனையடுத்து அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காவல் துறையினர் தன் மீது பொய் வழக்கு தாக்கல் செய்து காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட மனுதாரர், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி பதிவான சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க வேண்டும், விசாரணை அதிகாரி அமுதாவின் அறிக்கையை தன்னிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.01.2024) மீண்டும் விசாரணை வந்தது. அப்போது நீதிபதி இளங்கோவன், அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை பாதிக்கப்பட்ட அருண்குமாருக்கு வழங்க உத்தரவிட்டார். மேலும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT