ADVERTISEMENT

திருவாரூரில் மோசடி செய்தவனை விரட்டிப்பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த பெண்

05:04 PM Sep 05, 2018 | selvakumar

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவதாக பண மோசடி செய்தவரை விரட்டி பிடித்து காவல்துறையினரிடம் ஓப்படைத்தார் ஒரு பெண், அந்த துணிச்சலான சம்பவத்தால் திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சோ்ந்தவர் ஐய்யபன். இவர் மற்றும் சிலர் பொதக்குடியில் உள்ள முகமது தாரிக் என்பவரிடம் கத்தார் நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட்டில் பணிபுரிவதற்காக ரூ1.75 லட்சத்தை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த பொங்கல் பண்டிகை அன்று விமான டிக்கெட் மற்றும் விசா வழங்கி திருச்சி விமான நிலையத்திற்கு ஐய்யபன் மற்றும் பணம் கொடுத்தவர்களை வரவழைத்துள்ளார் முகமது தாரிக். விமான நிலையம் வந்தவர்களை விமானம் சென்னையிலிருந்துதான் என கூறி அனைவரையும் சென்னை அழைத்து சென்று அங்கு விடுதியில் அறை எடுத்து மூன்று தினங்கள் தங்க வைத்துவிட்டு முகமது தாரிக் தலைமறைவாகி விட்டார்.

அப்போதுதான் விசா மற்றும் விமான டிக்கெட் அனைத்து போலியானது என தொியவந்துள்ளது. அதன்பின்னர் முகமது தாரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் தேடியுள்ளனர் ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஐய்யபனின் மனைவி கௌசல்யா திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றும் வரும் தனது உறவினரை பார்க்க சென்ற போது அங்கு 7 மாதமாக ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருக்கும் முகமது தாரிக்கை பார்த்து அதிர்ச்சியைடைந்து அவரை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது முகமது தாரிக் தப்பித்து ஓடியுள்ளார். தைரியசாலியான கௌசல்யா அவரை இழுத்து பிடித்து மருத்துவக்கல்லூரி காவல்துறை விசாரணை அலுலகத்தில் அடைத்து வைத்துள்ளார்.

பின்னர் திருவாரூர் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் தொிவித்து அவர்களை வரவழைத்து அவர்களிடம் உரிய விவரத்தை தொிவித்து காதரை ஒப்படைத்தார். முகமது தாரிக் கைது செய்த காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT