புதுச்சேரியில் பல்வேறு வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

அதில் வங்கி கணக்கிலிருந்து போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பல கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததை அடுத்து நூதன திருட்டில் ஈடுபட்ட பாலாஜி , ஜெயச்சந்திரன் , டாக்டர் விவேக் உள்ளிட்ட 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்துருஜியின் மூளையாக செய்யப்பட்டதாக கூறி திருப்பூர் அவினாசி திருமுருகன்பூண்டியை சேர்ந்த பீட்டர் , கோவை ராமகிருஷ்ணாபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த தினேஷ் , சென்னையைச் சேர்ந்த இர்பான் ரகுமான் ஆகிய மூன்றுபேரை சமீபத்தில் கைது செய்தனர். மேலும் சந்துருஜியை தீவிரமாக தேடி வந்தனர்.

Advertisment

fake atm

இந்நிலையில் சந்துருஜியை சென்னையில் புதுச்சேரி சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இவரை இன்று மாலை புதுச்சேரிக்கு கொண்டு வருகின்றனர். இவரை கைது செய்துள்ளதால் இவ்வழக்கில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது, மேலும் யார்யாருக்கு தொடர்பு என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.