ADVERTISEMENT

பேருந்து மீது விழுந்த ராட்சத மரம்! 

11:10 AM Nov 23, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் ராட்சத பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளன. மேலும் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளன. கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அதில் அரசுப் பேருந்தும் லாரியும் சிக்கியுள்ளன. அதேபோல், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, ராட்சத மரம் ஒன்று சாய்ந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற எஸ்.இ.டி.சி. (விரைவுப் பேருந்து) மீது அந்த மரம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பயணிகள் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா எனும் தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT