ADVERTISEMENT

செம்பரம்பாக்கத்தில் ராட்சத குழாய் உடைப்பு

11:54 AM Nov 15, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பொழிந்து வரும் நிலையில், கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 24 அடியில் 22 அடி நீர்மட்டம் தாண்டி உள்ளது. வினாடிக்கு 278 கன அடியிலிருந்து 440 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 25 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி அருகில் உள்ள கல்குவாரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் செல்லும் ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அருவி போலப் பீய்ச்சி அடித்து வருகிறது. மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 15 அடி அளவுக்கு மேல் நீர் பீய்ச்சி அடித்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT