Increase in water opening in Sembarambakkam Lake!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு வினாடிக்கு, 500 கனஅடியிலிருந்து தற்போது, 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

'நிவர்' புயல் காரணமாக நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகபட்ச நீர் வரத்து6,500 கனஅடியாக இருந்த நிலையில், வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு அதிகபட்சமாக 7 ஆயிரம் கனஅடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்துக் குறைந்தது. இதன் காரணமாகநீர் திறப்பு500 கனஅடியாகக் குறைக்கப்பட்ட நிலையில், செம்பரப்பாக்கம்நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்,தற்போது நீர் திறப்பு1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறுகரையோர மக்களுக்குமீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment