ADVERTISEMENT

அவதூறு பரப்பி திருமணத்தை தடுக்கும் கும்பல்... சிங்கிள்ஸ் வைத்த ருசீகர பேனர்!

10:44 AM Aug 14, 2019 | kalaimohan

கன்னியாகுமரி மாவட்டம் புதுவிளையில் திருமணத்திற்காக வரன் தேடும் ஆண்கள் பற்றி அவதூறு பரப்பும் கும்பலுக்கு வஞ்சப்புகழ்ச்சியுடன் பேனர் வைக்கப்பட்டுள்ள ருசீகர சம்பவம் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே புதுவிளை எனும் கிராமத்தில் இளைஞர்கள் அதிகம் பேருக்கு திருமணம் ஆகாத நிலையில் பல இளைஞர்கள் திருமணத்திற்காக வரன் தேடி வருகின்றனர். ஆனால் அந்த ஊருக்கு மணமகன் தேடிவரும் பெண் வீட்டாரிடம் ஒரு கும்பல் ஒன்று மணமகன்களை பற்றி அவதூறு பரப்பி திருமணத்தை தடுப்பதாகவும் அதனாலேயே அங்கு பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் அந்த பகுதியில் திருமணம் ஆகாத வரன்தேடும் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில், புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமண வரன்களை ஊரின் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மேலும் தங்களது நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. குறிப்பு. திருமண வரன்களை தடுப்பதற்கு முன்கூட்டியே தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்று டீ கடை மற்றும் பொதுவெளிகளில் அமர்ந்துகொண்டு திருமணவரன்களை தடுப்பதற்காக ஒரு கும்பல் உள்ளதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என இரணியல் காவல்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT