ADVERTISEMENT

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு  நீதிமன்றத்தில்!

11:30 PM Dec 31, 2018 | bagathsingh

ADVERTISEMENT

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியதில் கீரமங்கமலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊள்ளூர் இளைஞர்கள் சாலை போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து 2 நாட்கள் வரை அரசு அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் வரவில்லை என்றும் சேதங்களின் மதிப்பை குறைத்து காட்டப்பட்டுள்ளதாகவும் வடகாடு, கொத்தமங்கலம், அணவயல், கீரமங்கலம், பனங்குளம், பெரியார் இணைப்புச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு பகலாக மறியல் போராட்டம் நடந்தது. சாலையில் சமையல் செய்து இரவில் சாலையிலேயே தங்கினார்கள்.


இந்த நிலையில் கொத்தமங்கலத்திற்கு இரவில் 5 ஜீப்புகளில் அரசு அதிகாரிகள் வந்த போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 5 ஜீப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. சில அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த நாட்களில் போலிசார் தடியடி நடத்தி வீடு வீடாக சென்று சந்தேகத்தின்பேரில் 63 பேரை போலிசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.


ஆனால் எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்களும் 45 நாட்களாக கொத்தமங்கலத்தில் எரிக்கப்பட்ட இடத்திலேயே கிடந்தது. இந்த நிலையில் திங்கள் கிழமை கீரமங்கலம் போலிசார் மற்றும் அதிகாரிகள் கிரேன் மூலம் ஜீப்புகளை தூக்கி டிராக்டரில் வைத்து ஆலங்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதியிடம் காண்பித்து மீண்டும் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு அனைத்து ஜீப்புகளையும் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT