Skip to main content

வருகிறது லாரி ஸ்டைக் ... காய்கறி, கேஸ் விலை  கிடு... கிடு..

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
lock up

 

அகில இந்திய அளவில் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளதோடு வருகிற 20.7.18 முதல் இந்தியா முழுக்க கால வரையற்ற லாரி ஸ்டைக் நடைபெறும் என போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள். 

 

இது பற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டாக இன்று கூறுகையில்,  டீசல் விலை ஏற்றம்... காப்பீடு தொகை உயர்வு .... கங்க சாவடி வசூல் அதிகரிப்பு ... என நாளுக்கு நாள் விலையேற்றம் மத்திய பா.ஜ.க. அரசு செய்து வருகிறது.  இதனால் லாரி தொழில் சீராக செய்ய முடியவில்லை. கடுமையான விலை ஏற்றத்தால் வாடகையை கூட்ட வேண்டியுள்ளது. இது நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

 

ஒரு தொழில் நடைபெற வேண்டுமென்றால் நம்பக தன்மை வேண்டும் இந்த லாரி தொழிலில் தினம் ஒரு வாடகை ஏற்ற முடியாது மத்திய மோடி அரசு இதை புரிந்து கொள்ள வில்லை.  டீசல் விலை குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு கட்டுக்குள் இருக்க வேண்டும்  அதே போல் சுங்க சாவடி கட்டணம் அவ்வப்போது ஏற்றப்படுகிதது. இதனால் பொருளதார சிரமங்களை அரசு ஏற்படுத்துகிறது. ஆகவே மத்திய பா.ஜ.க. மோடி அரசு மோட்டார் வாகன தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதோடு இந்தியா முழுக்க லாரி தொழில் காப்பற்ற பட வேண்டும் இதில் ஈடுபட்டுள்ள சுமார் 30 லட்சம் குடும்பங்களின் வாழ்வியல் சூழலை இந்த அரசு தெரிந்து கொள்ள வேண்டும் என கூறுகிறார்கள்.

 

மேலும் அவர்கள் இந்த லாரி ஸ்டைக்கால் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுவதோடு விலைவாசி கடுமையாக உயரும் என்கிறார்கள். குறிப்பாக காய்கறி, கேஸ் சிலின்டர் விலை கூட உள்ளது. தமிழ்நாட்டில் '4 லட்சம் லாரிகள் இயங்காது என்றும் வருகிற 15ந் தேதி யுடன் சரக்கு புக்கிங் நிறுத்தப் படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று நாமக்கல்லில் அறிவித்துள்ளது.’

சார்ந்த செய்திகள்

Next Story

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு  நீதிமன்றத்தில்!

Published on 31/12/2018 | Edited on 01/01/2019
lo

 

தீ வைத்து எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்கள் 45 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியதில் கீரமங்கமலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலை போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊள்ளூர் இளைஞர்கள் சாலை போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து 2 நாட்கள் வரை அரசு அதிகாரிகளும், மீட்புக்குழுவினரும் வரவில்லை என்றும் சேதங்களின் மதிப்பை குறைத்து காட்டப்பட்டுள்ளதாகவும் வடகாடு, கொத்தமங்கலம், அணவயல், கீரமங்கலம், பனங்குளம், பெரியார் இணைப்புச் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரவு பகலாக மறியல் போராட்டம் நடந்தது. சாலையில் சமையல் செய்து இரவில் சாலையிலேயே தங்கினார்கள். 

 


    இந்த நிலையில் கொத்தமங்கலத்திற்கு இரவில் 5 ஜீப்புகளில் அரசு அதிகாரிகள் வந்த போது பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 5 ஜீப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. சில அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த நாட்களில் போலிசார் தடியடி நடத்தி வீடு வீடாக சென்று சந்தேகத்தின்பேரில் 63 பேரை போலிசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.


    ஆனால் எரிக்கப்பட்ட 5 அரசு வாகனங்களும் 45 நாட்களாக கொத்தமங்கலத்தில் எரிக்கப்பட்ட இடத்திலேயே கிடந்தது. இந்த நிலையில் திங்கள் கிழமை கீரமங்கலம் போலிசார் மற்றும் அதிகாரிகள் கிரேன் மூலம் ஜீப்புகளை தூக்கி டிராக்டரில் வைத்து ஆலங்குடி நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று நீதிபதியிடம் காண்பித்து மீண்டும் கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு அனைத்து ஜீப்புகளையும் கொண்டு வந்தனர்.

l

 

Next Story

வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து- மலைவாழ் மக்கள் 5 பேர் பலி 

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
l1


பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை அருகே உள்ள குருமலை காட்டு பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் இன்று கோட்டூர் சந்தையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொண்டு மினி லாரியில் 15 பேர் வால்பாறை சாலையில் உள்ள காடம்பாறை அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து  இதில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டும்  அவ்வழியாக நீண்ட நேரம் யாரும் செல்லாததால் விபத்து ஏற்பட்டது தெரியவில்லை.  பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அங்கு விரைந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சன்னாசி மல்லப்பன் ராமன் மற்றும் வெள்ளையன் அவரது மனைவி செல்வி உள்ளிட்ட 5 பேர் பலியாகினர் மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நான்கு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

 இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  குருமலை காட்டுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் வாரம் ஒருமுறை இவர்கள் 35 கிலோமீட்டர் நடைபாதையாக வந்து பின்னர் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இன்று அதே போல் பொருட்களை வாங்கிச் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து எதிர்பாராதவிதமாக நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.