ADVERTISEMENT

வீடுகட்டி தருவதாக மோசடி... போலீசார் வழக்குப்பதிவு!

11:28 PM Jun 12, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாநகராட்சியில் உள்ள கே.டி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாற்பது வயது அனிதா. இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகில் கடற்கரை சாலையை ஒட்டி உள்ள கூனிமேடுபகுதியில், ஒரு வீட்டுமனை வாங்கி அதில் வீடு கட்ட தீர்மானித்தார். அதன்படி கூனிமேடுபகுதியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்கு முன்பதிவு செய்தார். அதற்கு முன் பணமாக 2018 ஆம் ஆண்டு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். அதன் பிறகு அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒருதேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 52 லட்சம் ரூபாய் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தார். அந்த வங்கியும் அனிதா அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அவருக்கு 2019 ஆம் ஆண்டில் 52 லட்ச ரூபாய் கடன் தருவதற்கு ஒப்புதல் அளித்து அதில் முதல் தவணையாக 42 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளது.

அனிதா அந்த 42 லட்ச ரூபாய் பணத்தையும் வீட்டுமனை கொடுத்து அதில் வீடு கட்டித் தருவதாக ஒப்பந்தம் செய்து கொடுத்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 46 வயது ஜெயச்சந்திரன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். வீட்டுமனை உட்பட அதில் வீடுகட்டி முடித்து அனிதாவிடம் ஒப்படைப்பதற்கு ஜெயச்சந்திரன் மேலும் 12 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். வங்கியிலிருந்து அடுத்து வரவேண்டும் தவணை பணம் வருவதற்கு தாமதம் ஆகியுள்ளது. வேறு வகையில் தனது உறவினர்கள் மூலம் 12 லட்சம் பணத்தை திரட்டி ஜெயச்சந்திரனிடம் கொடுத்துள்ளார். பணம் முழுவதையும் பெற்றுக்கொண்ட ஜெயச்சந்திரன் அனிதாவிற்கு வீடு கட்டித் தருவதாக கூறிய அந்த இடத்தில் தனது உறவினர் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்து அனிதாவை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். தற்போது இதுகுறித்து தகவல் தெரியவந்ததையடுத்து அனிதா விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஜெயச்சந்திரன் தன்னிடம் பண மோசடி செய்தது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஜெயச்சந்திரன் மோசடி செய்தது உறுதி என்பது தெரிய வந்துள்ளதையடுத்து மோசடி நபர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT