ADVERTISEMENT

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த அறக்கட்டளை நிர்வாகி

12:22 PM Jul 04, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை வேங்கிகால் பகுதி ராணி அண்ணாதுரை நகரை சேர்ந்த பாஷா தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்த நிலையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாஷா என்பவர் அன்புடைமை அறக்கட்டளை என்று ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது பக்கத்து வீட்டில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்பெஷல் சைல்ட் என்று அழைக்கப்படுகின்ற 16 வயதுடைய சிறுமியை கடந்த ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் 1098 சைல்ட் ஹெல்ப்லைன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நிர்மலா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை வன்கொடுமை செய்த பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT