11 people arrested for misbehaving with two girls in Pocso

சென்னை புளியந்தோப்பு பகுதிக்கு அருகே உள்ளது கன்னிகாபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து தங்களது குடும்பத்தை பாதுகாத்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் ஒருவரதனது தோழியை அழைத்துக்கொண்டு கன்னிகாபுரத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்த மூன்று பெண்களும் தங்களுடைய ஆண் நண்பர்களை அழைத்துக்கொண்டு அடிக்கடி ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், கடந்த 29 ஆம் தேதியன்று வீட்டைவிட்டு வெளியே சென்ற 17 வயது சிறுமி, அன்றிரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைப்படைந்த நேரத்தில், அந்த சிறுமி நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். ஒருகட்டத்தில் கோபமடைந்த உறவினர்கள், “இவ்ளோ நேரம் எங்க போயிருந்த. ஒழுங்கா சொல்லிடு. நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?” என சிறுமியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த சமயம், மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அந்த சிறுமி, தன்னை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறினார்.இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக புளியந்தோப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

Advertisment

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அப்போது, இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்கான எந்த ஒரு அடையாளங்களும் இல்லை. சிறுமியின் ஒத்துழைப்பின் பேரிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது" என போலீசாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிறுமி, தனது உறவுக்காரப்பெண் மற்றும் அவரது தோழி என 3 பேரும் சேர்ந்துகொண்டுஇரவு நேரங்களில் பல இடங்களில் சுற்றுவது தெரியவந்தது. மேலும், அந்த சமயத்தில் அவர்களிடம் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பழகி வந்துள்ளனர். இத்தகைய சூழலில்அவர்களிடம் ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று அந்த மூன்று பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அந்த பெண்கள்கூறிய தகவலின்படிபுளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தனுஷ், சஞ்சய், பாஸ்கரன் மற்றும் முத்துராமன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், 3 பேர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். இந்நிலையில், அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 8 பேரை புழல் சிறையிலும் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.புளியந்தோப்பு பகுதியில் 2 சிறுமிகள் உள்பட மூன்று பேரை 11 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்சென்னை மாநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.