ADVERTISEMENT

குமாி அமமுக கூடாரம் காலியானது... மாஜி அமைச்சா் பச்சைமால் அதிமுகவில் இணைந்தாா்!

04:54 PM Nov 05, 2019 | kalaimohan

அமமுகவில் சாதாரண தொண்டாில் இருந்து மா.செ மற்றும் மாநில நிா்வாகிகள் என ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருக்கிறாா்கள். உள்ளாட்சி தோ்தலுக்கு முன் அமமுகவில் இருந்து முக்கிய நிா்வாகிகளை அதிமுகவில் இணைத்துவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா்களும் வியூகம் வகுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜெயலலிதா இருந்தபோது மந்திாியாகவும், மா.செ ஆகவும் குமாி மாவட்டத்தில் கோலோச்சியவா் பச்சைமால். அதேபோல் நாகா்கோவில் தொகுதி எம்எல்ஏ ஆகவும் சில மாதங்கள் மா.செ ஆகவும் இருந்தவா் நாஞ்சில் முருகேசன். அந்த நேரத்தில் குமாி மாவட்ட அதிமுகவில் தளவாய் சுந்தரம், பச்சைமால், நாஞ்சில் முருகேசன் என முக்கோண கோஷ்டி அரசியல் இருந்தது
.

இந்தநிலையில் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி அணிக்கு சென்றனா் பச்சைமாலும், நாஞ்சில் முருகேசனும். இதில் பச்சைமாலின் ஆதரவாளா்களும் பச்சைமாலை நம்பி டிடிவி அணியிலே இருந்தனா். இந்தநிலையில் அமமுகவின் குமாி கி.மா.செ இருந்து டிடிவியின் நற்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்றியிருந்தாா் பச்சைமால்.

அதன்பிறகு பாராளுமன்ற தோ்தலுக்கு பிறகு பச்சைமால் மீண்டும் அதிமுகவுக்கு போகும் மனநிலையிலே இருந்து வந்தாா். இதையடுத்து அதிமுக கி.மா.செ அசோகன் நோிலே பச்சைமாலின் வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்தாா். அதிலிருந்து பச்சைமால் மீது சந்தேக பாா்வை டிடிவிக்கு ஏற்பட்டது. மேலும் பச்சைமாலை பணம் நெருக்கடியும் சுற்றியது. மேலும் அமமுக மண்டல மாநில நிா்வாகிகளும் உாிய மாியாதையை பச்சைமாலுக்கு கொடுக்கவில்லை.

இந்தநிலையில் தான் மீண்டும் தாய் கழகமான அதிமுகவுக்கு போக பச்சைமால் முடிவெடுத்தாா். அதன்படி இன்று பச்சைமாலும் நாஞ்சில் முருகேசனும் 95 பேருடன் தளவாய்சுந்தரம் தலைமையில் சென்று இபிஎஸ்-ஓபிஎஸ் சந்தித்து அதிமுகவில் இணைந்தனா். இதனால் குமாி மாவட்டத்தில் அமமுகவின் கூடாரமும் காலியாகி விட்டது என்கின்றனா்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT