நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி படு தோல்வியை சந்தித்தது.போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனால் கட்சியிலிருந்து வேட்பாளர்களும்,நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக,திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் ஒன்றிய அமமுக செயலாளர் ராமன் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

Advertisment

ttv

திருவள்ளூர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான காமராசு சந்தித்து நேற்று இரவு அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் அமமுக நிர்வாகிகள் காளிதாஸ், ராஜா, ஜோதிபாசு, செல்வம், பேரழகன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.இதனால் தினகரனின் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தேர்தல் முடிவுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு செல்வதால் அடுத்து என்ன செய்யலாம் என்று தீவிர ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றனர்.