TTV

இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில்,

Advertisment

ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் இருந்த அடுத்த நாளே தனியார் தொலைக்காட்சியில் ஓபிஎஸ் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்''டிடிவி தினகரன் சார்தான் என்னை அம்மாவிடம் அறிமுகப்படுத்தினார்'' என்றுஆனால் இப்போது அந்த நிலைமாறி சார் என்று சொன்னவர் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்.

Advertisment

எதற்காக ஓபிஎஸ் தர்மயுத்த நடத்தினார், இந்த கட்சி இந்த குடும்பத்தின் வசம் போகக்கூடாது. அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள். ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருக்கிறது என கூறிதானே தர்மயுத்தம் நடத்தினார். பிறகு ஏன் என்னை சந்திக்க நினைக்க வேண்டும். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தேன் என்கிறரர் நான் எதுவுமேஅவரது குடும்பத்தை பற்றி சொல்லவே இல்லை. அவர் துரோக சிந்தனை கொண்டவர் அதுதான் என நிலைப்பாடு. இப்பொழுதும் அவர் என்னை சந்திக்க நினைத்ததுகுறுக்கு வழியில் முதல்வர் பதவியை அடையத்தான்.

போனவருடம் என்னை சந்தித்ததை அவர் ஒப்புக்கொண்டது போலவே போன மாதம் என்னை சந்திக்க அவர் முயன்றதை விரைவில்ஒப்புக்கொள்வார். அதற்கான சூட்சமம் எனக்கு தெரியும்.அதையும் ஒப்புக்கொள்ள வைக்கிறேன். இன்னும் மூன்று மாதத்தில் இதேஓபிஎஸ் ஆம் நான் டிடிவி தினகரனை போன மாதம் சந்திக்க நினைத்தது உண்மைதான் என சொல்வார்எனக்கூறினார்.

Advertisment