ADVERTISEMENT

கஜா புயலை காரணம் காட்டி உயிர் மரங்களை வெட்ட அனுமதிக்கும் வனத்துறை

04:18 PM May 06, 2019 | selvakumar

கஜா புயலில் சாய்ந்த வனத்துறைக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புடைய மரங்களை சிலர் அதிகாரிகளின் துணையோடு வெட்டி கடத்தி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை குரல் எழுப்புகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தஞ்சாவூருக்கு அருகில் உள்ள வல்லம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் பரப்பளவில் பல வகை மரங்கள் கொண்ட வனம் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தில் மரங்கள் வேருடனும், கிளைகள் முறிந்தும் சாய்ந்தன. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வனத்துறையினர், அந்த மரங்களை அப்புறப்படுத்துவதுபோல், உயிருடன் இருக்கும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தரமான மரங்களையும் நூற்றுக்கணக்கில் வெட்டி கடத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "எங்கள் ஊரில் வனத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்தில் பல வகையான மரங்கள் உள்ளன. இதில் கஜா புயலில் ஒரு சில நாட்டு மரங்கள் மட்டுமே வேருடன் சாய்ந்தன. இங்குள்ள ஒருவரின் உதவியோடு இங்குள்ள ஒருவருக்கு குறைந்த விலைக்கு மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளனர். அவரோ உயிருடன் இருக்கும் மரங்களையும் வெட்டி எடுத்துச்செல்கிறார். இது இங்குள்ள அதிகாரிகளுக்கும் தெரியும் கையூட்டு பெற்றுக்கொண்டு இதுபோல் செய்ய உதவுகின்றனர்" என்கிறார்.

அதிகாரிகளோ, "கஜா புயலில் சில மரங்கள் விழுந்துவிட்டன. அந்த மரங்களை அரசு விலைக்கு மதிப்பீடு செய்து ஏலமிடுவது வழக்கம். உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலும், ஏலம் விட்டால் போட்டி வரும் என்பதாலும் தனி நபர் ஒருவரிடம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் உயிருடன் இருந்த சில மரங்களையும் வெட்டியுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்" என்கிறார்.

இது தான் சிறு மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் முறையா, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை கடத்திவிட்டு வெரும் 97 ஆயிரம் அபராதம் விதிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT